சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும்.
இதேவேளை தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும்.முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.
இதுபோன்ற முடி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். தினமும் தலைக்கு குளிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இது முடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுகிறது.
கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, ஒவ்வொரு நபரும் தவறாமல் தலைக்கு குளிக்கவேண்டும். முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. இது தானாகவே முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது.
முடி உதிர்தலுக்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. தலைமுடியை தேவைக்கு குறைவாகக் அலசினால், முடி வலுவிழந்து, உச்சந்தலையில் அதிகப்படியான சருமம் உற்பத்தியாகி, முடியை ஒட்டும் தன்மையுடையதாக்கி, முடி உதிர்வை அதிகரிக்கும்.
இதேபோல், ஒருவர் தலைமுடியை அலசினால், அது உச்சந்தலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உச்சந்தலையில் அதிக வறட்சி ஏற்படுவதுடன், முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறும். இதனால் தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.
வாரத்திற்கு எத்தனை முறை தலை குளிக்க வேண்டும்? வாரத்திற்கு எத்தனை முறை முடியை கழுவ வேண்டும் என்பது நபரின் முடி வகை மற்றும் முடி அடர்த்தியைப் பொறுத்தது.
உதாரணமாக, ஒருவருக்கு சுருள் முடி இருந்தால், அவர்கள் 3-4 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும்.
இதேவேளை, ஒருவருக்கு எண்ணெய் பசை இருந்தால், அவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும்.ஒருவருக்கு மெல்லிய மற்றும் நேரான முடி இருந்தால், தலைமுடி அழுக்காக இருக்கும் போது தான் தலைக்கு குளிக்க வேண்டும்.