வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்தவர்கள் அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் என்பவரும் சந்திரிகா அமரசிங்க என்ற பெண்ணுமாவர்.
இவர்கள் இருவரில் வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் என்பவர் வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.