இரத்தினபுரி – பலாங்கொடை, பெட்டிகல பகுதியில் தனது மகளை சரமாரியாக தாக்கிய காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தற்தையை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 27 வயதுடைய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மகளின் தாய் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக கணவன் மற்றும் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ஹெஷானி ரொட்ராகோ இன்றையதினம் உத்தரவிட்டுள்ளார்.