தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்
தெற்கு தாய்லாந்தில் உள்ள யாலா மாகாணத்திற்கு சுற்றுலா செல்வதற்காக பாங்காங் அருகே குழு ஒன்று பஸ்சில் சென்று கொண்டிருந்தன நிலையில் பேரூந்து சூரத் தானி மாகாணத்தில் உள்ள சாலையின் வளைவில் திரும்பும்போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்
அத்துடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது