ஒரு மாதமான, பெயர் சூட்டப்படாத பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும் உறங்கிக் கொண்டிருந்த சிசுவிடம் வித்தியாசம் காணப்பட்டதையடுத்து பெந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இதனை தொடர்ந்து பெந்தோட்டை வைத்தியசாலையினால் இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் பெந்தோட்டை பொலிஸாரும் பஹல்கமஹா மரண விசாரணை அதிகாரி கே.வி.டி.உபாலி குமாரசிங்கவும் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.