தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த பதின்ம வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மனமுடைந்த சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.