தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம்
தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு இடத்தில் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.
இந்தநிலையில் மொத்த தொகையான 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐந்தாண்டுகளில் செலுத்தி முடிக்க வேண்டும். எனவே தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம் மட்டுமே என்றும் கூறினார்