தாமரை கோபுரத்தின் திறக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நாட்களில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிடலாம்.
இதேவேளை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பயணச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளதுடன், இரவு 11.00 மணி வரை பார்வையிட முடியும்.