கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் இயக்குநர்கள் தலைமையில் இக்குழுவினரை வரவேற்கும் நிகழ்வு றோயல் ஹோட்டலில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் ஆலோசகர் நிபுன திபதுமுனுவா ஆகியோரின் தலையீட்டினால், வேலை கோட்டா மீண்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இருநூறு இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்கவுள்ளதுடன் ஏனைய குழுவினர் எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.