வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில், தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வவுனியா- தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில், அரசுக்கு சொந்தமான காணியில், சிலர் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி, அப்பகுதிக்குச் சென்ற வவுனியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர்,† அனுமதியற்ற வியாபார நிலையங்களை அகற்றியிருந்தார்.
இந்நிலையில்†குறித்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி,† தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர், நேற்று (வியாழக்கிழமை) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிராம சேவகரால் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு† பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தாக்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.