நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பொலிஸாரை தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.