அமெரிக்காவில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினியிரை அக்டோபர் 20ஆம் திகதி திருமணம் செய்யவிருந்த நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் திருமண விபரம் வெளியாகியிருக்கிறது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வைஷாலி தாக்கர் அக்டோபர் 15ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
தன் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானியின் தொல்லை தாங்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
மேலும் மிதேஷ் குமார் கோரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அமெரிக்காவில் வேலை செய்து வரும் மிதேஷ் குமார் கோருக்கும், வைஷாலிக்கும் அக்டோபர் 20ஆம் திகதி திருமணம் நடப்பதாக இருந்தது.
இதற்காக நடிகை வைஷாலி இந்தூரில் இருக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மிதேஷ் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார்.
திருமணத்திற்காக அக்டோபர் 15ஆம் திகதி இந்தியாவுக்கு வர வேண்டியது. அதற்குள் ராகல் நவ்லானி மிதேஷை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து திருமணம் நின்றுவிட்டது.
திருமணம் நின்று போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் வைஷாலி. முன்னதாக கென்யாவில் வேலை செய்யும் பல் மருத்துவருக்கும், வைஷாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அந்த மாப்பிள்ளையையும் தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்தினார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.