தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின் 5வது சந்தேகநபரான களஞ்சிய கட்டுப்பாட்டாளரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் (15.02.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.