தம்புள்ளை நகருக்குள் திடீரென வந்த மூன்று காட்டு யானைகளினால் தம்புள்ளை நகரை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த மூன்று காட்டு யானைகளும் தம்புள்ளை நகருக்கு வந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து நகரின் பாதுகாப்பு கருதி சீகிரிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதோடு யானைகளை விரட்டுவதற்காக 24 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.