இலங்கை முழுவதும் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் புத்தாண்டை நோயாளர்களுடன் தாதியர்கள் கொண்டாடியுள்ளனர்.
அதன்படி குறித்த தாதியர்கள் நோயாளர்களுக்கு இனிப்பு மற்றும் பலகாரங்களை பகிர்ந்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.