ஹட்டனில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (25-03-2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பல தரப்பினரால் மாகாண கல்வி செயலாளரிடம் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித். யு. கமகேவின் அனுமதியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.