தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூன்று மாவீரர்களின் தாய் ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளினுடைய திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது.

