வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பாவனையற்ற கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பழைய பேருந்து நிலையம் செயற்பட்ட காலத்தில் பயணிகளின் காத்திருப்பு பகுதியாக அமைக்கப்பட்ட கட்டடங்கள், பின்னர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமாக செயற்பட்டன.
பயணிகளுக்கான கட்டடங்களாக அன்றி, அங்கு இயங்கி வந்த அவ்விற்பனை நிலையங்கள் கைவிடப்பட்ட போதிலும், அவை அகற்றப்படாமல் இருந்தன.
இந்நிலையிலேயே இக்கட்டடத்தில் இரவு வேளைகளில் சிலர் தங்கியிருந்து, சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா நகர சபைக்கு சொந்தமான இந்த கட்டடம் தொடர்பில் நகர சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதோடு இது தொடர்பில் விரைந்து நடவடைக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.