மன்னாரில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னாரில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகோழி விலை குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ இறைச்சி கோழி 1360 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1450-1500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.