புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை அதே பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று முறையில் முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10-01-2024) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கார் சேதம் அடைந்துள்ளதுடன், விபத்திற்குள்ளான இரு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த மணலை புதுக்குடியிருப்பு பொலிஸார் ஏற்றி வந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.