கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 43 வயதான குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் சாதாரண காயங்களுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளார்.