முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் 5 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த விசாரணையில், குழந்தை உண்மையில் வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடரில் கைதுசெய்யப்பட்ட 51 வயதான புல் வெட்டும் தொழிலாளியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புல் வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக சிறுவனைத் தாக்கியதால் குழந்தை இறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அச்சமயத்தில் பீதியடைந்த சந்தேக நபர் உடைந்த கண்ணாடி பாட்டிலின் துண்டுகளை சிறுவனின் உடலுக்கு அருகில் வைத்துள்ளார், இது குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு வெளிப்படையான காரணமாக இருக்கும் என அதனை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் விசாரணையில் தெர்வித்துள்ளார்.
வியாழக்கிழமை ( 08-06-2023) ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, நேற்று (ஜூன் 09) சந்தேகநபர் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.