முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (13-03-2024) மாலை புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியை சேர்ந்த 62 வயதான செல்லையா பரமலிங்கம் என்பவரே பாதிக்கப்பட்டவர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கைவேலி பகுதியிலிருந்த குளவி கூடு ஒன்று காற்றில் கலைந்த நிலையில் அதிலிருந்த 30க்கும் மேற்பட்ட குளவிகள் வீட்டிலிருந்த செல்லையா பரமலிங்கம் மீது கொட்டியுள்ளது.
இதையடுத்து அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.