நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15-03-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது, பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
நாட்டில் இவ்வாறான செயலினால் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.