தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிலையில் 6 சீசன் 98 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் எடிகே எலிமினேஷனில் வெளியேறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருக்கின்றனர்.
இதனிடையே தொகுப்பாளர் DD திவ்யதர்ஷினி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.
போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசும் DD விக்ரமனிடம்,”அழகா இருக்கீங்க விக்ரமன்” எனச் சொல்கிறார். இதனை கேட்டு புன்னகைத்த விக்ரமன் நன்றி சொல்கிறார்.
அப்போது, மைனா,”விக்ரமன் பிறவி பலனையே அடைஞ்சிருப்பாரு” என கலகலப்பாக சொல்கிறார். இதனை கேட்டு அனைத்து போட்டியாளர்களும் சிரிக்கின்றனர்.
இதனிடையே, பேசிய பிக்பாஸ், “திவ்யதர்ஷினி வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டுக்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி. ஹேப்பி பொங்கல்” எனச் சொல்ல, திவ்யதர்ஷினியும் பொங்கல் வாழ்த்து சொல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து பிரபல தொகுப்பாளர்களான மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்காயுடன் சூப்பர் சிங்கர் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பாட்டு பாடி போட்டியாளரை மகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.
இதேவேளை விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சிறக்கடிக்க ஆசை சிரியலின் காதநாயகி மற்றும் காதநாயகன் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.