உப தபால் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி கொள்ளையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை – கொட்வில – மெதகொடவில தபால் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மிளகாய் பொடியை வீசி அலுவலகத்தில் பணத்தை திருட முயற்சித்த நிலையில், சந்தேகநபரின் முயற்சி தவிர்க்கப்பட்டதால் முகத்தை மூடியவாறு தபால் நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர், தபால் மா அதிபரிடம் சில விடயங்களை விசாரிப்பதற்காக சென்ற நிலையில், அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசி தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் , தபால் நிலைய அதிபர் சந்தேக நபருடன் போராடி பணத்தை கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார்.
அவரது திட்டம் நிறைவேறாததால் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிளகாய்ப் பொடி தாக்குதலால் பாதிக்கபப்ட்ட தபால் மா அதிபர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளி மேற்கொண்டு வருகின்றனர்.