நாளுக்கு நாள் நடிகர் தனுஷின் புகழ் எட்டுத்திக்கும் அதிகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக அளவு அவார்டுகளை வாங்கிக் குவிக்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும். விருதுகளை வாங்கிக் குவிப்பதில் இருவருமே மன்னர்கள் தான். அந்த வகையில் ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவே தனுஷ் தேசிய விருது வாங்கியதை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றிமாறன் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்ததில் எனக்கு ஒரு சதவிகிதம் கூட பங்கு கிடையாது என கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் அசுரன் படத்தில் நடித்த தனுஷின் சிவசாமி கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து வெற்றிமாறன் கூறுகையில், தனுஷுக்கு விருது கிடைத்ததற்கு அவரது உழைப்பே காரணம் எனவும், அதில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குதிரையை குளத்தின் அருகே தான் கூட்டிச் செல்ல முடியும் எனவும், அது தண்ணீர் குடிப்பது அதோட வேலைதான் என்பதை போல அந்த சிவகாமி கதாபாத்திரத்தில் தனுஷ் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு நடித்ததுதான் அவரது வெற்றிக்கும் விருதுக்கும் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு மனிதனை பார்த்ததே இல்லை எனும் அளவுக்கு வெற்றிமாறனை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.