வீடொன்றில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் பென்தொட போதிமாலுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இவ் விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.