பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
கெளசல்யா, சர்மிளா, சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், மூவருக்கும் 17 வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்களுக்கு 0767070913, 0771658788 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

