தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் தமக்கு வரிச்சலுகை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தனியார் வகுப்புக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.