வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிட்டம்பஹுவவைச் சேர்ந்த 22 வயதான மோட்டார் சைக்கிளின் சாரதியே உயிரிழந்தவர் ஆவார்.
கட்டுவன: வலஸ்முல்ல-மிதெனியா வீதியில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
24 வயதான மோட்டார் சைக்கிளினின் சாரதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெரலபத்த: கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் உள்ள “Y” சந்திக்கு அருகில் ஒரு கொள்கலன் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலியந்தலையைச் சேர்ந்த 49 வயதான மோட்டாடர் சைக்கிளின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

