லிந்துலையில் தனது 3 1/2 வயது பிள்ளை மீது தந்தை கொதி நீரை ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பிள்ளைகளின் தந்தையே மது போதையில் வந்து தனது தாயாருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே தனது 3 1/2 வயது பிள்ளை மீது கொதி நீரை ஊற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய் கொழும்பில் வீட்டு வேலை செய்து வருவதாகவும் 6 பிள்ளைகளும் பாட்டியின் அரவணைப்பிலேயே உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொதி நீரை பிள்ளை மீது ஊற்றிய நபர் பிரிதொரு வழக்கில் ஆஜராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் அவ்விடத்திலே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.