இலங்கை பாடகி யொஹானி டி சில்வா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி, யொஹானிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்ததுடன், தனது பாரியாருடன் யொஹானியின் பாடலையும் கேட்டு கைதட்டி ரசித்து மகிழ்ந்தார்.
குறித்த புகைப்படம் சமூகவலைகளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அண்மைய நாட்களில் தனது மினிக்கே பாடல் மூலம பிரபல்யமான இலங்கை பாடகி யொஹானி டி சில்வா பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.
யோகானியின் மெனிக்கே மகே ஹிதே பாடலை யூடிப்பில் 150 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.