ஈரானில் தந்தை காரை திருடியதால் 9 வயது சிறுவன் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் நடந்த இந்த சோகமான சம்பவத்தில், தந்தை காரைத் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, பொலிசாரால் சுடப்பட்ட குண்டு அவரது 9 வயது மகன் மீது பாய்ந்துள்ளது.
இந்நிலையில் 9 வயதான Morteza Delf Zaregani என அடையாளம் காணப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷுஷ்தார் கவுண்டியின் காவல்துறைத் தலைவர் ருஹோல்லா பிக்டெலி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார், மேலும் திருடப்பட்ட வாகனத்தை துப்பாக்கியால் சுட்டு அதிகாரிகள் தடுக்க முயன்றபொது இவ்வாறு நடந்ததாக அவர் கூறினார்.
இதன்போது சிறுவனின் தந்தை மீது ஏற்கெனெவே கார் திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதையும் அதிகாரிகள் கூறியுள்ளார்.
எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் பொலிஸார் எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என தந்தை கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறுவனின் மரணம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியது, பலரும் சிறுவனுக்கு வருத்தம் மற்றும் இரங்கல்களை வெளிப்படுத்திவருகின்றனர்