கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் தனது தந்தையின் கைத்தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாடசாலை அதிபர் கைத்தொலைபேசியை தன்னிடம் வைத்துக் கொண்டதுடன் மறுநாள் தந்தையுடன் பாடசாலைக்கு வருமாறு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.