பத்தேகம நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உணவகம் ஒன்றுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் வீட்டுக்கு சென்று மன்னா கத்தி ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ள நிலையில் உணவக உரிமையாளரின் மகன் உலக்கை ஒன்றில் குறித்த இளைஞனை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது.
சம்பவம் தொடர்பில் பத்தேகம, கொடகொட பிரதேசத்தை சேர்ந்த உணவக உரிமையாளரின் 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.