புத்தளத்தில் வீதி விபத்து ஒன்றில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அச் சிறுவன் தந்தையுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் வீதியில் நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.