தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்கள் உயிரிழக்கும் சதவிகிதம் குறைந்தளவில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுள் சுமார் 200 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட 23 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார பிரிவினால் தகவல்களை மறைப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.