தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றைய தினம் ஆஜராக முடியாது என தெரிவித்திருந்ததுடன் தனக்கு மற்றோரு திகதியை வழங்குமாறு கோரியிருந்தார்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(12) தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்காலை போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக படகுடன் கைது செய்யப்பட்ட பெலியத்தே சனா என்ற நபரின் வாக்குமூலம் தொடர்பான உண்மைகளை விசாரிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.