உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியிருந்தது. அதே சமயம், நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
கொழும்பு தங்க சந்தை நிலவரம்
தற்போது கொழும்பு தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூ. 163,800 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூபா. 177,000 என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.