சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்வ் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851 டொலராக காணப்பட்டது.
இதேவேளை, கொழும்பில் நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் 187,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன