மில்கோ நிறுவனம், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 635 மெட்ரிக் பால்மாவை அனுமதியின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்தமை குறித்து விவசாய அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பால்மாவை விற்பனை செய்ய வேண்டாம் என அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருந்த போதிலும், மில்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பணிப்பாளர் சபையின் அனுமதியின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் மில்கோ தலைவருக்கு அறிவித்துள்ளார்.