அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில் தகாத உறவால் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.