மாத்தறை வெலிகம பிரதேச சபை வரகாபிட்டிய தகனசாலையின் பெயர்க்கல்லில் 51 அரச தரப்பு அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குறித்த தகனச்சாலை பெயர்கல்லில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்பட 51 அரச தரப்பினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குறித்த தகனச்சாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது