ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் இன்று 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், கம்சத்கா கடற்கரையில் 5 வெள்ளை டொல்பின்கள் கரையொதுங்கியிருந்தது.
உள்ளூர் மீனவர்கள் அவற்றை மீட்டு பாதுகாத்தனர். கடலில் அலைகள் சற்று உயர்ந்ததும், அவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
இந்நிலையில், டொல்பின்களின் அசாதாரண நடத்தை பேரழிவுக்கான முன் எச்சரிக்கையா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.

