அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமடையவில்லை, கொள்வனவு பெறுமதி ரூ. 318 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 333 ஆகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 316.71 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 335 ஆகவும் உள்ளது.