டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368. 54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 357.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் , யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 376.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் , ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 449.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 431.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.