வாட்ஸப் மூலம் அனைவரினதும் தகவல்கள் திருடப்படுன் என பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த விதமான செல்போன்கள் மூலமும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும் ஹேக்கர்ஸ் அந்த செல்போன் மூலமாக நமது தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
உலகின் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் மொபைல் போனில் உள்ள டேட்டாவை எளிதாக ஹேக் செய்யும் வாய்ப்பு வாட்ஸ் செயலி மூலம் நடக்கும் என பாவெல் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதம் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ் அப் செயலியை தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே அது மிகவும் பாதுகாப்பாற்ற செயலி.
அடுத்த மாதத்தில் இருந்து ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட சில செல்போன் மொடல்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இது எந்தளவுக்கு பயன்படுத்த முடியாத செயலி என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.