2024 டி20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி 29-ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து, இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் 2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் , நேபாளம், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா ஆகிய 20 அணிகள் இடம் பெற உள்ளன.