தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி விதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், தனியார் துறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி முறைக்கான பரிந்துரைகள் OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு) மற்றும் G20 ஆகியவற்றுக்கு காலக்கெடு ஒப்பந்தத்திற்காக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.